Vettiya Pesuven Vettiya Pesuven Author
Title: திருமண கற்பழிப்புகள் பற்றி பெண்கள் பேச வேண்டும்: கத்ரீனா கைப்
Author: Vettiya Pesuven
Rating 5 of 5 Des:
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தி நடிகை கத்ரீனா கைப் கலந்து கொண்டு பேசியதாவது:- வன்முறைகளை பெண்கள் அமைதியாக சந்திக்க கூடாது. த...
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தி நடிகை கத்ரீனா கைப் கலந்து கொண்டு பேசியதாவது:-
வன்முறைகளை பெண்கள் அமைதியாக சந்திக்க கூடாது. திருமண கற்பழிப்பு உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்து பெண்கள் கட்டாயம் பேச வேண்டும். சில சமயங்களில், படித்த பெண்கள் கூட சமுதாய நெறிகள் காரணமாக உயிர் இழக்க நேரிடுகிறது.

திருமண கற்பழிப்பை குற்றம் என அங்கீகரிக்க பெரும்பாலான சமுதாயம் தவறுகிறது. இதுபற்றி ஏராளமான பெண்கள் பேச வேண்டும். பெண்கள் தங்களை தாழ்வாகவும், பலவீனமாகவும் கருதுவது சரி அல்ல. ஏனென்றால், நாம் பலவீனமான பாலினம் இல்லை.
இந்த உலகம் பெரும்பாலும் ஆணாதிக்க சமூகத்தால் கட்டுப்படுத்தப்பட்டது. இத்தனை ஆண்டுகளும், வன்முறைகளை எதிர்கொண்ட பெண்கள், அதனை வெளிப்படையாக பேசாமல் மவுனம் காத்தனர். மாநிலங்களில் பெண் முதல்-மந்திரிகளை கொண்ட ஒரு நாட்டில், பாலின வேறுபாடு நிகழ்வது வருத்தம் அளிக்கிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்களை கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் தினசரி அடிப்படையில் வந்த வண்ணம் இருக்கின்றன. இருந்தாலும், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பிற குற்றங்கள் வெளிச்சத்துக்கு வராமல் இருப்பதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன்.
இவ்வாறு கத்ரீனா கைப் தெரிவித்தார்.

About Author

Advertisement

Post a Comment

 
Top