Vettiya Pesuven Vettiya Pesuven Author
Title: தயாரிப்பாளர், இயக்குனரை அனுசரித்து போகாததால் என்னை கொடுமைபடுத்தினார்கள்: விஷால் படநாயகி கோபம்
Author: Vettiya Pesuven
Rating 5 of 5 Des:
கர்நாடகத்தை சேர்ந்த நடிகை மாதவிலதா. தெலுங்கு படம் மூலம் நாயகி ஆன இவர் விஷாலின் ‘ஆம்பள’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தனது திரை ...

கர்நாடகத்தை சேர்ந்த நடிகை மாதவிலதா. தெலுங்கு படம் மூலம் நாயகி ஆன இவர் விஷாலின் ‘ஆம்பள’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தனது திரை உலக பயணம் பற்றி மாதவிலதா கூறும்போது, ‘‘நடிக்க வேண்டாம் என்று தடுத்த குடும்பத்தினர் வார்த்தையை மீறி வீட்டை விட்டு வெளியேறினேன். ஐதராபாத்தில் தங்கி இருந்து வாய்ப்பு தேடினேன். 2 வருடம் வீட்டுக்கே போகவில்லை.
படவாய்ப்பு கிடைத்ததும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என்னிடம் மரியாதையாக பேசினார்கள். ‘நாம் நட்பாக இருக்கலாமா’ என்று கேட்டார்கள். அப்போது அர்த்தம் புரியாமல் ‘நல்ல நண்பர்களாகத்தானே’ என்றேன். அதற்கு ‘இல்லை இல்லை வேறு நட்பு’ என்றார்கள். அதன்பிறகு தான் அர்த்தம் புரிந்தது.
இதுபற்றி என் நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். அது, ‘அந்த வி‌ஷயத்தில்’ அனுசரித்து போகச் சொன்ன இயக்குனருக்கே தவறுதலாக போய்விட்டது. அதன்பிறகு படப்பிடிப்பு தளத்தில் என்னை மோசமாக நடத்த தொடங்கினார்கள். கேரவனை நிறுத்தினார்கள். ஓட்டல் அறையை மாற்றி விட்டார்கள். மரத்தடியில் மேக்கப் போட வைத்தார்கள். 55 நாட்கள் கொடுமைப்படுத்தி விட்டார்கள்.
உதவி இயக்குனர்கள்கூட மோசமாக நடந்து கொண்டார்கள். அம்மாவை என்னுடன் வரவிடவில்லை. படப்பிடிப்பு தளத்தில் என் அப்பாவாக நடித்தவரை தவிர யாருடனும் பேச அனுமதிக்கவில்லை. ஆசிரியர் தினத்தில் இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்தேன். இவ்வளவு கஷ்டம் கொடுத்தும் வாழ்த்துகிறாயா? என்றார். 
அதற்கு நான், ‘நீங்கள் என்குரு’ என்றேன். அப்போது உதவி இயக்குனர் ஒருவர், ‘இயக்குனரிடம் மன்னிப்பு கேளுங்கள் எல்லா வசதியும் கிடைக்கும்’ என்றார். நான் முடியாது என்று கூறிவிட்டேன்” என்றார்.

About Author

Advertisement

Post a Comment

 
Top