Vettiya Pesuven Vettiya Pesuven Author
Title: படப்பிடிப்பு தளத்தில் இயக்குனரின் கன்னத்தில் அறைந்த நடிகை
Author: Vettiya Pesuven
Rating 5 of 5 Des:
நாட்டாமை தம்பிக்கு டீச்சராக வந்த இரண்டெழுத்து நடிகைக்கு தற்போது சினிமாவில் அவ்வளவாக வாய்ப்பு இல்லை. இதனால், கடந்த சில வருடங்களுக்கு மு...
நாட்டாமை தம்பிக்கு டீச்சராக வந்த இரண்டெழுத்து நடிகைக்கு தற்போது சினிமாவில் அவ்வளவாக வாய்ப்பு இல்லை. இதனால், கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.
கணவர் வந்த வரவு நடிகைக்கு தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதன்படி, தற்போது ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகைக்கு அப்படத்தின் இயக்குனர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த படத்தின் இயக்குனர் படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் ரொம்பவும் கடுமையாக நடந்து கொள்வாராம். இவரை நெருங்கவே அவரது உதவியாளர்கள் பயந்து நடுங்கும் சமயத்தில், துணை நடிகைகளிடமும் இவர் அத்துமீறி நடந்துகொள்வாராம்.தனக்கு ஒத்துழைக்காத துணை நடிகைகளை படத்தில் இருந்து தூக்கி விடுவேன் என்றும் மிரட்டுவாராம். வாய்ப்பு நழுவிப் போகிறதே என்று நினைக்கும் துணை நடிகைகள் இவரது டார்ச்சருக்கு அடிபணிந்து போய்விடுகிறாரார்களாம். இதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த இயக்குனர், டீச்சர் நடிகையிடம் தனது கைவரிசையை காட்டியிருக்கிறார்.ஆனால், மற்றவர்களைப்போல் டீச்சர் நடிகை அடங்கிப் போய்விடவில்லையாம். தனக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குனரை படப்பிடிப்பு தளத்தில் அனைவர் முன்னிலையிலும் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டாராம். படப்பிடிப்பு தளத்தில் கண்டிப்பான இயக்குனராக வலம்வந்த இயக்குனருக்கு, நடிகையின் பளார் அறை மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாம்.இதைத் தொடர்ந்து அப்படத்தின் தயாரிப்பு குழு இயக்குனரை அழைத்து கண்டித்தும் உள்ளதாம். இனிமேல், இதுபோன்ற பிரச்சினைகள் வந்தால் படத்தில் இருந்து தூக்கிவிடுவதாகவும் தயாரிப்பாளர் தரப்பு அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இயக்குனர் தற்போது பெட்டிக்குள் அடைபட்ட பாம்பாக அடங்கிப் போயிருக்கிறாராம்.

About Author

Advertisement

Post a Comment

 
Top